
Rajini Vazi - ரஜினி வழி
Monthly Membership
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
an aurality audio book production - ரஜினி வழி, ரஜினி நடித்த 25 திரைப்படங்களை இயக்கிய அனுபவங்களின் தொகுப்பு, ரஜினிகாந்தின் திரை வாழ்கையை ஆரம்பித்து வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர் என்றால் அவரைக் கதாநாயகனாக நிலைநிறுத்தியவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். 72 படங்களை இயக்கிய எஸ்.பி.எம், ரஜினியை வைத்து மட்டுமே 25 படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற உயரத்தை அடைய இந்தப் படங்களே அடித்தளமாக அமைந்தன. இந்த 25 படங்களிலும் எஸ்.பி.எம் ரஜினியைப் பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவரது நடிப்பை மெருகேற்றினார். முரட்டுக்காளை, புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, ஸ்ரீ ராகவேந்திரர், நல்லவனுக்கு நல்லவன், குரு சிஷ்யன், பாண்டியன் என எஸ்.பி.எம் ரஜினியை வைத்து இயக்கிய 25 படங்களின் சுவாரசியம் மிக்க அனுபவத் தொகுப்பைப் பத்திரிகையாளர் எஸ்.சந்திரமெளலி எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேரடியாகப் பெற்று இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ரஜினிகாந்தின் திரையுலக வளர்ச்சியையும், தான் ஏற்ற ஒவ்வொரு வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக அவர் அளித்த கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். அன்றைய திரையுலகம் எப்படி இயங்கியது என்பதைச் சொல்லும் காலக் கண்ணாடியாகவும் இந்த நூல் விளங்குவது கூடுதல் சிறப்பு. முன்னட்டை ஓவியம்: ஓவியர் ஜீவா (Author) SP Muthuraman எஸ்.பி. முத்துராமன் எழுதி , S Chandra Mouli எஸ். சந்திர மௌலி (Editor) , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iPhone app store and other places.
Praise
