
சிவனருள் வேட்டல்
Monthly Membership
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
சிவனருள் வேட்டல்
திரு.வி.க அவர்களால் எழுதப்பட்டு 1947-ல் வெளியிடப்பட்ட ஒரு பக்தி நூல் ஆகும். இந்நூல் சிவபெருமான் மீதான பக்திப் பாடல்களையும், சிவ வழிபாட்டின் சிறப்பையும், மெய்யறிவையும் போற்றும் வகையில் பாடப்பட்டுள்ளது. சிவ வழிபாடு, பக்தி, சிவம்.
திரு.வி.க அவர்கள் முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், பொதுமை வேட்டல் போன்ற பல பக்தி மற்றும் சமத்துவ நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருத்த ஓசையில் முனைவர் ரமணி இந்நூலை ஒலிநூலாக்கியிருக்கிறார்.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
Praise
