நாதாவே நாயகமே

நாதாவே நாயகமே


Unabridged

Sale price $2.60 Regular price$4.00
Save 35.0%
Quantity:
Add to wishlist
  • Cancel anytime!
  • Memberships will renew every month
  • One credit every month on renewal
  • You can spend 1 credit every month to get an audiobook
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];


சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் 'தமிழ் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி', 'திருக்கோப்பற்றுப் பதிஞ்சம்', 'பத்தந்தாதி', 'திருமதினந்தாதி', 'கோப்பந்துக் கலம்பகம்', 'கோப்பந்துப் பிள்ளைத் தமிழ்', 'கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை', 'நீதி வெண்பா', 'ஷம்சுத்தாசின் சேவை' உள்ளிட்ட ஏராளமான கவிதைகள், வசனநடைக் காவிய நூல்களைப் படைத்தார்.

சங்கத் தமிழிலக்கியம் முதல் சககால இலக்கியம் வரை பல நூறு தமிழ் நூல்களை ஒலிநூலாக்கம் செய்திருக்கும் முனைவர் ரமணியிடமிருந்து 'நாதாவே நாயகமே' எனும் செய்குதம்பிப்பாவலர் நூல்.

தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர். பொதுத் தொண்டில் அரை நூற்றாண்டுக் காலம் ஈடுபட்டவர். கம்பன் காப்பியத்தை செவிநுகர் கனியாக்கி, அனைவருக்கும் வழங்கியவர். செந்தமிழின் வளர்ச்சிக்கு இறுதிவரை உழைத்தவர். மதம், சாதி கடந்து மனிதநேயம் பரப்பியவர். தனது பாடல்கள் மூலம் மக்களிடையே தேடரிய நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தவர். 'சீரிய செந்தமிழ்ச் செல்வன்' என கவிமணியால் பாராட்டப்பட்டவர். அவர்தான் செய்குத்தம்பி பாவலர்.

நாகர்கோவில், கோட்டாறு அருகில் உள்ள 'இளங்கடை' என்னும் சிற்றூரில், பக்கீர் மீறான் (மீரான்) - ஆமினா வாழ்விணையருக்கு மகனாக 31-07-1874 ஆம் நாள் பிறந்தார் பாவலர்.

பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், சமயத் தத்துவங்களைப் பட்டிதொட்டியெங்கும் செந்தமிழில் பரப்பினார். வள்ளலார் குறித்து தமிழகம் முழுவதும் உரையாற்றினார். மத நல்லிணக்கத்துக்காகப் பெரிதும் பாடுபட்ட இவருக்கு, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பூரணகும்ப மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.