கிருஸ்துவின் அருள் வேட்டல்

கிருஸ்துவின் அருள் வேட்டல்


Unabridged

Sale price $1.30 Regular price$2.00
Save 35.0%
Quantity:
Add to wishlist
  • Cancel anytime!
  • Memberships will renew every month
  • One credit every month on renewal
  • You can spend 1 credit every month to get an audiobook
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

திரு.வி.க., எழுதிய கவிதை நூல் 'கிறிஸ்துவின் அருள் வேட்டல்'. இது இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை மற்றும் அறநெறிகளைப் போற்றி, அவரிடம் அருள் வேண்டிப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். மனிதன் தன் அகந்தையை அழித்து, கிறிஸ்து காட்டிய வழியில் அன்புடனும் பணிவுடனும் வாழ வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. நோக்கம்: "நான்" என்ற அகங்காரத்தை ஒழித்து, கிறிஸ்துவ அருள் மூலம் அகத்தூய்மை அடைதல். தன்மை: மனந்திரும்புதல், முறையீடு, மன்னிப்பு வேண்டுதல் போன்ற ஜெப உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள்.

இந்நூல் கிறிஸ்து பெருமானின் மீதான ஈடுபாட்டால், திரு.வி.க அவர்களால் இயற்றப்பட்ட ஒரு சிறந்த பக்தி இலக்கியமாகத் திகழ்கிறது.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

விருத்த ஓசையில் முனைவர் ரமணி இந்நூலை ஒலிநூலாக்கியிருக்கிறார்.