
திருமால் அருள் வேட்டல்
Monthly Membership
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
திருமால் அருள்வேட்டல், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க) அவர்களால் இயற்றப்பட்ட ஒரு பக்திச் செய்யுள் நூல் ஆகும். இது 1938-ல் வெளியிடப்பட்டது. முருகனருள் வேட்டல், சிவனருள் வேட்டல், பொதுமை வேட்டல், கிறிஸ்துவின் அருள் வேட்டல், புதுமை வேட்டல் போன்ற இவரது பிற அருள் வேட்டல் நூல்களுடன் இதுவும் ஆன்மீகச் சிறப்பு மிக்கது.
தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகர், திருமாலிருஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவரங்கம், சீர்காழி, தில்லை, திருக்கோவிலூர், திருக்காஞ்சி, திருவல்லிக்கேணி, திருமலை கோவில்களில் உள்ள பெருமாளிடம் அருள் வேண்டி துதிக்கும் பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன.
விருத்த ஓசையில் பாடல்களுக்கு ஒலிநூல் வடிவம் தருகிறார் முனைவர் ரமணி.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
Praise
