{"product_id":"book-kfja","title":"நேசம் மறவாத நெஞ்சமடி","description":"\u003cp\u003e\"அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது...\" என்று வாய்க்குள் முணுமுணுத்தாள். \u003c\/p\u003e\u003cp\u003eமீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது.\u003c\/p\u003e\u003cp\u003e \"அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ...\" என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது.\u003c\/p\u003e\u003cp\u003eஅவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு.\u003c\/p\u003e\u003cp\u003eமீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான்.\u003c\/p\u003e\u003cp\u003eவாகனத்தை கிளப்பும் முன், \"வெல்கம் டு திஸ் காலேஜ்\" என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா. \u003c\/p\u003e\u003cp\u003eமீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை.\u003c\/p\u003e\u003cp\u003eஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்...\u003c\/p\u003e\u003cp\u003e\"ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க...\u003c\/p\u003e\u003cp\u003eஎன்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...\" என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான். \u003c\/p\u003e\u003cbr\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49495226384688,"sku":"BDkfja","price":10.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/kfja-Square-cover.jpg?v=1770251056","url":"https:\/\/downpour.com\/products\/book-kfja","provider":"Downpour","version":"1.0","type":"link"}