{"product_id":"book-k4uu","title":"இளநெஞ்சே வா...","description":"\u003cp\u003eமன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். \"அவளை வெளிய கூட்டி வா...\", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது.....\u003c\/p\u003e\u003cp\u003eபாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான்.\u003c\/p\u003e\u003cp\u003eஅவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. \"நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?\" என்றான்.\u003c\/p\u003e\u003cp\u003eமன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது.\u003c\/p\u003e\u003cp\u003e\"அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move\" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்...\u003c\/p\u003e\u003cp\u003eராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை....\u003c\/p\u003e\u003cp\u003eபாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான்.\u003c\/p\u003e\u003cp\u003eஅவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. \"இறங்கி வா...\" என்றான்.\u003c\/p\u003e\u003cp\u003eமணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.\u003c\/p\u003e\u003cbr\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49398165504304,"sku":"BDk4uu","price":10.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/k4uu-Square-cover.jpg?v=1773659682","url":"https:\/\/downpour.com\/products\/book-k4uu","provider":"Downpour","version":"1.0","type":"link"}