{"product_id":"book-jzwh","title":"வாழ்வின் முதல் காதலா! நீதானா...","description":"\u003cp\u003e\u003cstrong\u003e“வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு...\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eநீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம்,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eசெய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம்,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003e“ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு...\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eநம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eசெய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா...\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஅவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003e“என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003e“என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003e“இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Findaway World, LLC","offers":[{"title":"Audiobook","offer_id":49278992187696,"sku":"BDjzwh","price":9.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/661890-jzwh-Square.jpg?v=1732421737","url":"https:\/\/downpour.com\/products\/book-jzwh","provider":"Downpour","version":"1.0","type":"link"}