{"product_id":"book-jrly","title":"தித்திப்புயல் நீயடா :Thithippuyal Neeyada","description":"\u003cp\u003eசட்டென்று, அவள் உடலை தாவணியென மறைத்திருந்த ஆடையை அவன் கரம் உருவி எடுத்தது..\u003c\/p\u003e\u003cp\u003e அர்ஜுனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவள் \"அஜூ... என்ன பண்ற? டோன்ட் பிகேவ் லைக் திஸ், எனக்கு பிடிக்கலை?\" என்று அழுத்தமாக அவன் முகம் பார்த்து கூறினாள்.\u003c\/p\u003e\u003cp\u003eகீர்த்தியின் பேச்சில் அவளை மெல்ல விட்டு விலகியவன் கண்களோ அவள் மேனியை அணுஅணுவாக ரசனையாக துளைத்தது.\u003c\/p\u003e\u003cp\u003eஅவளை பார்த்தபடியே \"எஸ், எனக்கும் தான்... எனக்கும் தான் பிடிக்கலை. இந்த கல்யாணம் பிடிக்கலை... உன்னை பிடிக்கலை... என்ன பண்ணலாம்?\" என்றவன் அவன் இடுப்பில் கைகுற்றி, சற்றே அவள் முன் குனிந்து,\u003c\/p\u003e\u003cp\u003e\"கல்யாணத்தை நிறுதீடலாமா?\" என்று ஆழ்ந்த குரலில் வினவவும்,,\u003c\/p\u003e\u003cp\u003eஅதிர்ந்த விழிகளுடன் \"அஜூ...\" என்றவள் விழிக்க,\u003c\/p\u003e\u003cp\u003e\"எஸ், வேற வழியில்லை. பாரு, இந்த டிரெஸ்ல நீ எவ்ளோ அழகா இருக்க! எந்த ஆம்பளைக்குமே உன்னை இப்படி பாத்தா என்ன தோணனும்?\" என்றவன் விழிகள் பயணித்த இடங்கள் பெண்ணவளை உடல் கூச செய்தது.\u003c\/p\u003e\u003cp\u003eஅர்ஜுன் பார்வை எப்போதும் கண்ணியமானது. அதுவும் அவள் மேல் மிக கண்ணியமாக இருக்கும். அவன் அருகாமை கீர்த்திக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வை மட்டுமே கொடுக்கும். பயஉணர்வை அல்ல.\u003c\/p\u003e\u003cp\u003eஇப்போது அவன் பார்வை, அவன் அவளிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அணைத்தும் அவளுக்கு அவன் மேல் அச்சத்தைக் கொடுத்தது.\u003c\/p\u003e\u003cp\u003eஇத்தனை வருட நட்பில், அர்ஜுன் அவளை பயமுறுத்தக் கூட இப்படி பேசியதில்லை. \u003c\/p\u003e\u003cp\u003e\"அஜூ... ஸ்டாப் திஸ். ஸ்டுபிட் மாதிரி பேசாத, திஸ் இஸ் நாட் யூ. நான் போகணும்\" என்றவள் நகரப்போக, தன்னிரு கைகளால் அவளுக்கு அணைகட்டியவன், அவளை நெருங்கி நின்றான்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49402972635440,"sku":"BDjrly","price":7.15,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/jrly-Square-cover.jpg?v=1773657859","url":"https:\/\/downpour.com\/products\/book-jrly","provider":"Downpour","version":"1.0","type":"link"}