{"product_id":"book-hapx","title":"Isai Amuthu","description":"\u003cp\u003eபாவேந்தர் பாரதிதாசன் நூலான‌ இசை அமுது 52 பாடல்களை மூன்று பகுதிகளாகத் தருகிறது. முதல் பகுதியான காதல் பகுதியில் 31 பாடல்களும் இரண்டாவது பகுதியான தமிழ்ப் பகுதியில் 13 பாடல்களும் மூன்றாவது பகுதியான பெண்கள் பகுதியில் 8 பாடல்களுமாக 52 பாடல்கள் உள்ளன. இவை யாவும் இசையோடு பாடப்படுவத்ற்காக எழுதப்பட்டவை.\u003c\/p\u003e\u003cp\u003eபரந்த அளவில் அறியப்பட்ட இந்தப் பாடல் மூன்றாவது பகுதியில் உள்ளது. 1951ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் வெளியான 'ஓர் இரவு' படத்தில் இடம் பெற்ற V.J.வர்மா, M.S.ராஜேஸ்வரி பாடிய பாடல். இசையமைப்பு R. சுதர்சனம்.\u003c\/p\u003e\u003cp\u003eதுன்பம்நேர்கையில்யாழ்எடுத்துநீ\u003c\/p\u003e\u003cp\u003eஇன்பம்சேர்க்கமாட்டாயா? -- எமக்\u003c\/p\u003e\u003cp\u003eகின்பம்சேர்க்கமாட்டாயா? -- நல்\u003c\/p\u003e\u003cp\u003eலன்பிலாநெஞ்சில்தமிழில்பாடிநீ\u003c\/p\u003e\u003cp\u003eஅல்லல்நீக்கமாட்டாயா? -- கண்ணே\u003c\/p\u003e\u003cp\u003eஅல்லல்நீக்கமாட்டாயா?துன்பம்...\u003c\/p\u003e\u003cp\u003eவன்பும்எளிமையும்சூழும்நாட்டிலே\u003c\/p\u003e\u003cp\u003eவாழ்வில்உணர்வுசேர்க்க -- எம்\u003c\/p\u003e\u003cp\u003eவாழ்வில்உணர்வுசேர்க்க -- நீ\u003c\/p\u003e\u003cp\u003eஅன்றைநற்றமிழ்க்கூத்தின்முறையினால்\u003c\/p\u003e\u003cp\u003eஆடிக்காட்டமாட்டாயா? -- கண்ணே\u003c\/p\u003e\u003cp\u003eஆடிக்காட்டமாட்டாயா?துன்பம்...\u003c\/p\u003e\u003cp\u003eஅறமிதென்றும்யாம்மறமிதென்றுமே\u003c\/p\u003e\u003cp\u003eஅறிகிலாதபோது -- யாம்\u003c\/p\u003e\u003cp\u003eஅறிகிலாதபோது -- தமிழ்\u003c\/p\u003e\u003cp\u003eஇறைவனாரின்திருக்குறளிலேஒருசொல்\u003c\/p\u003e\u003cp\u003eஇயம்பிக்காட்டமாட்டாயா? -- நீ\u003c\/p\u003e\u003cp\u003eஇயம்பிக்காட்டமாட்டாயா?துன்பம்...\u003c\/p\u003e\u003cp\u003eபுறம்இதென்றும்நல்லகம்இதென்றுமே\u003c\/p\u003e\u003cp\u003eபுலவர்கண்டநூலின் -- தமிழ்ப்\u003c\/p\u003e\u003cp\u003eபுலவர்கண்டநூலின் -- நல்\u003c\/p\u003e\u003cp\u003eதிறமைகாட்டிஉனைஈன்றஎம்உயிர்ச்\u003c\/p\u003e\u003cp\u003eசெல்வம்ஆகமாட்டாயா? -- தமிழ்ச்\u003c\/p\u003e\u003cp\u003eசெல்வம்ஆகமாட்டாயா?துன்பம்...\u003c\/p\u003e\u003cp\u003eஇந்நூலின் 52 பாடல்களும் ஒன்றுக்கொன்று இசை இனிமையில் போட்டி போடுகின்றன என்றால் மிகையாகாது.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49414961168688,"sku":"BDhapx","price":4.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hapx-Square-cover.jpg?v=1773530275","url":"https:\/\/downpour.com\/products\/book-hapx","provider":"Downpour","version":"1.0","type":"link"}