{"product_id":"book-gsy3","title":"வேருக்கு நீர் - Verukku Neer","description":"\u003cp\u003eவேருக்கு நீர்\u003c\/p\u003e\u003cp\u003eராஜம் கிருஷ்ணன்\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eசாஹித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல்\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஇந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e    பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e    கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. \"நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?\" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e    பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e    இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஅன்புடன்\u003c\/p\u003e\u003cp\u003eராஜம் கிருஷணன்\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49429566521648,"sku":"BDgsy3","price":4.04,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gsy3-Square-cover.jpg?v=1773504277","url":"https:\/\/downpour.com\/products\/book-gsy3","provider":"Downpour","version":"1.0","type":"link"}