{"product_id":"book-gdps","title":"Suyasarithai","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\"கப்பலோட்டிய தமிழன்\" வ உ சிதம்பரம்பிள்ளை\u003c\/strong\u003e அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர்.\u003c\/p\u003e\u003cp\u003eஅவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eநூல்கள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eசுயசரிதை-1946\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417930866992,"sku":"BDgdps","price":9.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gdps-Square-cover.jpg?v=1773483048","url":"https:\/\/downpour.com\/products\/book-gdps","provider":"Downpour","version":"1.0","type":"link"}