{"product_id":"book-g58p","title":"Ettam Thirumurai Thiruvasakam","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதிருவாசகம்\u003c\/strong\u003e என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.\u003c\/p\u003e\u003cp\u003eபன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. \u003cem\u003eதிருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்\u003c\/em\u003e என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.\u003c\/p\u003e\u003cp\u003eதிருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417267773744,"sku":"BDg58p","price":9.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g58p-Square-cover.jpg?v=1773470587","url":"https:\/\/downpour.com\/products\/book-g58p","provider":"Downpour","version":"1.0","type":"link"}