{"product_id":"book-g57s","title":"Ettam Thirumurai Thirukkovaiyar","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதிருக்கோவையார்\u003c\/strong\u003e திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதைத் \u003cem\u003eதிருச்சிற்றம்பலக்கோவையார்\u003c\/em\u003e என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், \u003cem\u003eநண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் \"திருக்கோவை\" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு\u003c\/em\u003e என்பதால் விளங்கும்.\u003c\/p\u003e\u003cp\u003eஇந்நூல் 400 பாடல்களை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இஃது இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பரத்தையிற் பிரிவு ஈறாக 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் \u003cem\u003eபேரின்ப நூல்\u003c\/em\u003e ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்திரிக்கப் பட்டுள்ளனர்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417265611056,"sku":"BDg57s","price":7.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g57s-Square-cover.jpg?v=1773470450","url":"https:\/\/downpour.com\/products\/book-g57s","provider":"Downpour","version":"1.0","type":"link"}