{"product_id":"book-1uj3","title":"பொதுமை வேட்டல்","description":"\u003cp\u003eபொதுமை வேட்டல், 1942-ல் \u003cstrong\u003eதிரு.வி.க\u003c\/strong\u003e (திரு.வி.கலியாணசுந்தரனார்) அவர்களால் இயற்றப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ்ச் செய்யுள் நூலாகும். இந்நூல் இயற்கையோடு இணைந்த வாழ்வு, அருளின் சிறப்பு, நெஞ்சின் இயல்பு மற்றும் சன்மார்க்க வாழ்வு (சமதர்மம்) போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது. மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற கொள்கையை இந்நூல் வலியுறுத்துகிறது. மனிதர்கள் இயற்கையை நேசித்து, அதனுடன் இணைந்து வாழ வேண்டும் என்று திரு.வி.க இதில் பாடியுள்ளார். \u003c\/p\u003e\u003cp\u003eதிருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.\u003c\/p\u003e\u003cp\u003eவிருத்த ஓசையில் பாடல்களுக்கு ஒலிநூல் வடிவம் தருகிறார் முனைவர் ரமணி.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":66932000489776,"sku":"BD1uj3","price":4.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/1uj3-Square-cover.png?v=1781227582","url":"https:\/\/downpour.com\/products\/book-1uj3","provider":"Downpour","version":"1.0","type":"link"}